ஸ்ரீ இராமாநுஜர்
ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு – குறித்த
ஓர்
அறிமுகம் .
புதுவையில் ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டில் ஓரு லக்ஷம் பேர் பங்கேற்கும்
பாகவத சம்மேளனம் நடத்துவது என்றும் அதற்காக ஒரு விழாக்குழு துவங்கப்பட வேண்டும் என்றும்,
அது மற்ற விழாக்குழுவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதும்
முதல் தீர்மானமாக இருந்தது.
இரண்டாவதாக ஸ்வாமி
இராமாநுஜர் செய்த பிரசாரத்திற்குப் பிராதான்யம் கொடுப்பது என்றும், ஸ்வாமி இராமாநுஜரது
சித்தாந்தங்கள் ஆயிரம் ஆண்டுகள் கடந்துமட்டுமல்ல வரப்போகும் பல்லாயிரம்
ஆண்டுகளுக்கும் பொருந்தும் என்பதை உலகிற்கு நிலைநாட்ட வேண்டுமானால், அதை இதுவரை பலர்
செய்ய முயற்சித்ததும் , இலக்கை அடையாததற்கு அவர்கள் சந்தித்த சவால்களையும் தடைகளைப்
பற்றியும் நன்கு உணர்ந்து அந்த தடைகளை உடைக்கும்
விதமாக ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழுவை ஏற்படுத்துவது அவசியம் என்றும்.
பொதுமக்களை பெரிய அளவில் ஈர்க்கமுடியாததும் , அதைச் செய்வதற்குப் பொருளாதார
உதவிகள் கிடைக்காததும் , ஆக இந்த இரண்டு தடைகள் தான் பிராதானம் என்றாலும் அவை ஒன்றுக்கொன்று
தொடர்புடையதே. பொதுமக்களை பெரிய அளவில் ஈர்க்கமுடிந்தால் மற்றது பெரிய விஷயமல்ல ,ஆனால்
ஒருமுறை சாத்தியமானாலும், தொடர்ச்சியாக நடத்த இயலாது , பல நல்ல இயக்கங்கள் தோல்வியைச்
சந்தித்தது இங்குதான்.
ஸ்வாமி இராமாநுஜர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர், அவரது ஆயிரமாவது
ஆண்டிலாவது அவரை ஒரு சம்பிரதாயத்திற்குச்
சொந்தமானவர் என்பது போல இருக்கும் தோற்றம் களையப்பட வேண்டும், இல்லை என்றால்
“கடல் சூழ்ந்த மன்னுலம் வாழ“ என்று ஜெகத்தே
வாழவேண்டும் என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் நித்யானுசந்தானமாகச் சொல்லும் மங்கள ஸ்துதிக்கும்,
ஸ்வாமி இராமாநுஜர், ஸ்வாமி மணவாளமாமுனிகள் தொடங்கி வளர்த்த நமது விசிஷ்டாத்வைத சித்தாந்தத்திற்கும்
அர்த்தமில்லாது போய்விடும். எனவே ஸ்ரீ இராமாநுஜர்
ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு வேதத்தை பிராமாணஒத்துக்கொள்ளும் மற்ற சம்பிரதாயத்தை சார்ந்தவர்களையும்
உள்ளடக்கிய இயக்கமாக அது இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமானால் ஸ்ரீ.
உ..வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்
புதுவை எழுந்தருளி துவக்கி வைத்தாலொழிய சாத்தியமில்லை என்பதாலும், ஸ்ரீ. உ..வே.
வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசத்தால்
ஏற்படும் நல்விளைவுகளைச் சேமித்துவைக்கவும் , விழாக்குழு அதனுடைய சவால்களை எதிர்கொள்ளவும், புதுவையில் பல ஆண்டுகளாக
ஆன்மீகப்பனி செய்து வரும் இயக்கங்களை உள்ளடக்கிய சம்மேளனமாக அது இருந்தால்தான் அதன்
தீர்மானங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்த இயலும்.
இந்த காரணங்களின் அடிப்படையில்தான் ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு ஏற்படுத்தப்பட வேண்டும், என்கிற
நிதர்சன நிலையில் திருக்கோவிலூர் எம்பெருமானார்
ஜீயர் ஸ்வாமிகளை அணுகியபோது திருக்கோவிலூர்
எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் மகிழ்வுடன் மங்களாஸாசனம் செய்து உற்சாகப்படுத்தியதுடன்,
ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்
முன்னிலையில் தானே எழுந்தருளி தலைமைதாங்கி
நடத்தித்தருவதாகக் கூறி அதன்படியே நடத்தியும்
கொடுத்தார்.
அதன்படி.ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது
ஆண்டு விழாக்குழு கடந்த வருடம் 2012 மே
மாதம் திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர்
ஸ்வாமிகளின் தலைமையிலும் ஸ்ரீ.உ.வே. வேளுக்குடி
கிருஷ்ணன் ஸ்வாமிகளின் முன்னிலையிலும் ஒரு இயக்கமாக துவங்கப்பட்டுப்பல்வேறு நிகழ்சிகளைக்
கடந்த ஒரு வருடமாக நடத்தி வருகிறது.
இயக்கம் மற்றும் தலைவர்கள் .
இது ஆன்மீக நிகழ்வுகளைச்சமூக அக்கரையுடன் பல ஆண்டுகளாகக்கொடுத்து வரும்
இயக்கங்களையும் அதன் தலைவர்களையும் உள்ளடக்கிய ஓர் இயக்கம்.
போஷகர்கள் –
1. திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்
2. ஸ்ரீ. உ..வே. வேளுக்குடி
கிருஷ்ணன் ஸ்வாமிகள்
நோக்கம்
-
1.
ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டில் ஓரு லக்ஷம் பேர் பங்கேற்கும்
பாகவத சம்மேளனம் நடத்துவது.
2. ஸனாதன ஸம்பிரதாய
பிரசாரத்திற்கு உள்ள தடைகளைக் களைவது.
தடைகள்
1.
வெகுஜனங்களின் ஈடுபாடு குறைவு.
2. ஸனாதன இயக்கங்களுக்குப்
பொருளுதவி கிடைப்பதில் உள்ள சிக்கல்.
3.
அதனால் ஸனாதன மதத்தின் சாரமான விஷயங்களை வெகுஜனங்களின்
முன்பு வைக்க முடியாமை.
மூன்று பிரிவுகள்
1.
கோவில் கமிட்டி ,
2. ஸம்பிரதாய கமிட்டி
,
3.
விவாத மேடை கமிட்டி.
காரியக்கமிட்டி-
1.
உறுப்பினர் சேர்கை.
2. குழு மற்றும்
கமிட்டி அமைப்பது அதை நிர்வகிப்பது.
3. நிகழ்வுகளுக்குத்
திட்டமிடுதல் .
4. போஷகர்கள் -
திருக்கோவிலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள்
மற்றும்ஸ்ரீ. உ..வே.
வேளுக்குடி கிருஷ்ணன், ஸ்வாமிகள் அவர்களிடமிருந்து திட்டங்களுக்கு ஓப்புதல்
பெறுதல்.
5. ஓப்புதல் பெற்ற
திட்டங்களை, திட்டக்குழுவில் சமர்ப்பித்தல், திட்டங்களுக்குச்செயல் வடிவம் கொடுத்தல், நடத்திக்கொடுத்தல்.
6.
அனைத்துப் பிரிவுகளின் தலைவர்களுக்கு நிகழ்வுகளை நடத்திக்கொடுப்பது.
தனித்தனித்தலைமையின்
கீழ் இயங்கும் பிற கமிட்டிகள்
1. கோவில் கமிட்டி ,
2.
ஸம்ரதாய கமிட்டி
,
3.
விவாத மேடை கமிட்டி.
I.
பொது விவாத மேடை கமிட்டி .
II.
ஸனாதன தர்மமேடை
கமிட்டி .
4.
காலக்ஷேப கமிட்டி
.
5.
ரதயாத்திரை கமிட்டி
.
6.
பஜன் கமிட்டி
.
7.
திருவாதிரை திருவிழா கமிட்டி .
8.
திருமூல திருவிழா
கமிட்டி .
9.
திரு விசாக பாராயண
கமிட்டி .
10.
இராமாநுஜக்கூ
ட ஒருங்கிணைப்புக் கமிட்டி .
11.
நிகழ்வு மேளாண்மைக்
கமிட் டி .
12.
ஒருங்கிணைப்புக்
கமிட்டி .
13. மேடை நிர்வாகக் கமிட்டி .
ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு, மூன்று பிரிவாக செயல்படுகிறது.
1. கோவில் கமிட்டி ,
2.
ஸம்ரதாய கமிட்டி
,
3. விவாத மேடை
கமிட்டி.
1.கோவில் கமிட்டி
என்பது , ஸன்னிதி மற்றும்
காலாந்தரத்தில் விடுபட்டு போன உற்சவங்களைப் புனருத்தாரணம் செய்ய துணைபுரிவது
, வேதபாடசாலை நடத்துவது. மற்றும் பிரபந்தசேவை சந்தை சொல்லிக்கொடுப்பது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
2.ஸம்ரதாய கமிட்டி
என்பது , ஸ்ரீவைஷ்ணவ ஸம்ரதாயத்தை வளர்க்கும் பொருட்டு , கிரந்தக்காலக்ஷேபம்
, ஸ்ரீவைஷ்ணவ மஹாநாடு நடத்துவது, நடத்துபவவர்களுக்கு உறுதுணையாக இருப்பது , மற்றும் பிரபல வித்வான்கைளக் கொண்டு வாக்யார்த்த
ஸதஸ் போன்ற உரத்த சிந்தனை அரங்கம் ஏற்பாடு செய்வது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
3. விவாத மேடை
கமிட்டி என்பது ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின் கனவுத்திட்டம்
என்றால் மிகையாகாது, வரும் 2017ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற ஸ்ரீ இராமாநுஜரது ஆயிரமாவது ஆண்டில் புதுவையில் ஒருலக்ஷம் பேர் கூடுகிற
ஒர் மிகப்பெரிய ஸம்மேளனமாக அத்திருவிழா
நடைபெறவேன்டும் என்கிற திட்டத்தோடு ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு ஐந்து
வருடத்திற்கு முன்பே துவங்கப்பட்டு விட்டது.
விவாத மேடை கமிட்டி
ஏன்
ஒருலக்ஷம் பேர் இலக்கு என்பது சவாலானது என்றாலும் எம்பெருமானின் நிருகேதுக
கடாக்ஷத்தாலும், எம்பெருமானாரின் க்ருபையாலும் இது ஸாத்தியமே, அதற்கு ஸ்ரீ இராமாநுஜர்
ஆயிரமாவது ஆண்டு விழாக்குழுவின் கடந்த ஒரு வருட வெற்றிகரமான தொடற் செயல்பாடுகளே சான்று.
அதற்கான செயல் திட்டத்தை வரையறுக்க வேண்டி பல நல்ல ஆத்மாக்களின் ஒத்துழைப்புடன
விழாக்குழு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஒருலக்ஷம் பேர் இலக்கு என நிர்ணயத்ததற்கு அடிப்படைக்காரணம் இந்த இயக்கத்தின்
கருத்துக்கள் சாமானியனிடம் மட்டுமல்லாது அனைத்துப் பிரிவினரிடத்தும் சென்று சேரவேண்டும்
என்கிற நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுச் செயல்படுத்தபட இருக்கிறது.
ஸ்வாமி இராமாநுஜர் கரேய்கருணையால் ஆன்மீக உலகில் அனைத்துப் பிரிவினராலும்
அவரது சமூக, ஸம்ரதாய அக்கரையினாலும் ஏறறுக்கொள்ளப்பட்டவர் என்பது ஜெகத்பிரசித்தம்.
ஸ்ரீவேதவியாசரால் வளர்க்கப்பட்ட நமது ஸனாதன மதமானது ஸ்ரீ. ஆதிசங்கரர் தொடங்கி ஸ்ரீ. மத்வர் , ஸ்வாமி இராமாநுஜர் ஈறாக நன்கு
எளிமைப் படுத்தப்பட்டு ஆத்ம உஜ்ஜீவனத்திற்கு வழி காட்டும் படியாக நமது ஸம்பிரதாயம்
நன்கு ஓங்கி வளர்ந்துள்ளது.
இந்த அதிநவீன யுகத்தில் ஆஸ்திக்யம் குறைந்து விடவில்லை என்பதற்கு இன்று
அனைத்துக் கோவில்களிலும் கூடும் கூட்டமே பிராமாணம், இன்றைய ஆஸ்திகர்கள் மூன்று வகை.
1.
சாஸ்திர பரிச்சியம்
அல்லது நம்பிக்கை உள்ளவர்கள் ,
2.
சாஸ்திர பரிச்சியம்
இல்லாதவர்கள் அல்லது அதில் தங்களுக்காகச் சொல்லப்பட்டவைகள் இந்தக் காலகட்டத்திற்குப்
பொருந்தாதவை என்கிற எண்ணம் உள்ளவர்கள் .
3.
இதில் நாங்கள்
அனைத்தயும் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால், இந்த வயதில் அதைப் பின்பற்ற முடியாது அதற்கென்ற
காலத்திற்காகக் காத்திருப்பதாகச் சொலலும் மற்ரொரு பரிவினரும் உண்டு.
ஆஸ்திகர்களுக்குள் இந்த இரண்டாவது, மூன்றாவது வகையே 98 சதவிகிதம் பேர்
உள்ளனர்.இவர்கள் கடவுள் நம்பிக்கை வேறு, சாஸ்திரப்படி
வாழ்வது என்பது வேறு என்று நினைப்பவர்கள் , அது தங்களின் தவறல்ல, என்றும் அதற்கு அவர்கள்
கூறும் நியாயம் , அது இந்தக் காலத்திற்குப் பொருந்தாதது , தெரியாத பாஷையில் சொல்லப்பட்டுள்ளது,
வேதம் ஒரு சிலருக்கே சொந்தம் போல் இருப்பதும் என்பன.
சொந்த தமிழ் மொழியில் சொல்லப்பட்ட தர்மம், தமிழே தெரியாத தலைமுறையினருக்குப்
பயன்படபோவதில்லை. மேலும் அது தங்களுக்கென பிரத்யேகமாகச்
சொல்லவில்லை எனத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பது இப்படிச் சில, தன் வாழ்வியலுக்கும் வியாபாரத்திற்கும்
அதில் தாங்கள் அறிய வேண்டியது ஒன்றும் இல்லை
என்கிற எண்ணம் பரவலாக வந்து விட்டது.
சுமார் 25 , 30 வருடத்திற்கு முன்பு வரை தர்மம் பக்தி கலந்த சாஸ்திரமாக
கோவில்களில் உபன்யசிக்கப்பட்டு வந்தது, ஆனால் அது ஒரு சிறு கூட்டமாக தேய்ந்து போனதற்குச்
சில அடிப்படை காரணிகள் உள்ளன.
1.
இது வயதான காலத்தில்
நினைக்க வேண்டியது
2.
அந்தக் காலகட்டதில்
கோவில்களில் உபன்யாசம் செய்பவர்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானோர் இதைப் பகுதி
நேரமாகச் செய்தனர்.
3.
பிற்காலத்தில்
அதுவும் இல்லாது போய் , அவர்கள் முழுவதுமாக வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர்.
4.
உபன்யாசத்தையே
முழு நேரமாகச் செய்தவர்கள் கூட சிட்டம் கட்டி வைத்தது போலச் சூழ்நிலையை நினையாது சொல்லிக்
கொண்டும்,
5.
ஏற்பாடு செய்பவர்களும்
இதை ஒரு வருடாந்திர சடங்காகச் செய்யத்துவங்கியதும்.
6.
காலத்திற்கு
ஏற்ப நடத்துகிறேன் என்று கூறி , கதா காலக்ஷேபம் கர்நாடக இசை எனத் தொடங்கித் திரைப்பட
மெல்லிசை வரை எனத் தரம் தாழ்த்திக் கொண்டுபோய் விட்டனர் .
7.
ஆன்மீக வளர்ச்சிக்காகப்
பல நல்லாத்மாக்கள் எடுத்த பெரியமுயற்சிகளும் காலாந்திரத்தில் பொருளாதார உதவி கிடைக்காமால்,
கூட்டம் வராமல் பாதியில் நின்று போனது.
8.
நன்கு நடத்தப்படும்
பெரிய இயக்கங்களும் காலாந்திரத்தில் விளம்பரத்திற்காகச் சேர்க்ககூடாதவர்களைச் சேர்த்து,
பின்பு அவர்களே முக்கிய பொறுப்புகளில் வந்து இயக்க நோக்கத்தைத் திசைத்திருப்பி விட்டனர்.
பகவான் சிருஷ்டியில் எதுவும் வ்யர்த்தம் அல்ல என்கிற பொழுது, இது சனாதன
மதம், அதன் கோட்பாடுகளும் சனாதனமாகத்தான் இருக்கவேண்டும் அவை கேள்வி கேட்காத வெறும்
நம்பிக்கையை அடிபடையாகக் கொண்டிருக்கவேண்டுமா அல்லது , இக்கால விஞ்ஞான நிரூபணங்கள்
ஏதேனும் உண்டா , உண்டென்றால் அதை எப்படிப் புரிந்து கொள்வது?
ஆச்சாரிய புருஷர்களை அந்தந்தக் காலகட்டத்தில் அவதரிப்பித்து , தனது
எண்ணமான சாஸ்திரங்களின் அர்த்தம் நீர்த்துப் போகாது , அடர்த்திக் குறையாது வேத வேதாந்த
ஸ்மிருதி இதிகாச புராணங்கள் சொல்ல வந்த அர்த்தங்களை , அந்தந்தக் காலகட்டத்திற்குப்
பொருந்துமாறு எங்ஙனம் புரிந்து கொள்வது , என்பதைப் பகவான் காலகட்டத்திற்கு ஏற்பப் பல
வழிகளைப் பிரகாசிப்பித்து அருளியிருக்கிறான்.
அது எவ்வாறு எனில், நமது சனாதன மதக் கொள்கைகள் என்பன நமது அன்றாட வாழ்வியலை
அடிப்படையாகக்கொண்டது , அதில் மனித வாழ்வியல் முறைகள், அதைச் செய்வதற்கான மனோநிலைகள்,
வாழ்வியலின் காரணிகள் அதன் பயன்கள் போன்றவற்றைச் சொல்ல வந்தவை.மற்றும், அதைச் செய்வதற்கு
வேண்டிய அனுகுணமான சாதனங்கள் போன்றவை மனித உடலில் இயற்கையாகவே அமைந்துள்ளன. அதைச் செயல்படுத்த
இயலாதவனாக அவன் போகும் போதுதான் அவனுக்கு ஒரு கருவித் தேவைப்படுகிறது, கால சூழலில்
அது மறந்து, மறைந்து போனதால், அவன் நினைத்ததைச் செய்து கொள்ள கருவிகளை நாடுகிறான்
, எல்லாத்துறைகளிலும்.இதைத்தான் பரிணாம வளர்ச்சி, நாகரீகம் என நினைத்துக் கொள்கிறான்.
ஆனால், இன்றைய விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புக்கள் எல்லாம், மனிதனின் இயற்கையான சக்திகள்
பொய்த்துப் போனதால் வந்த மாற்று ஏற்பாடுகளே.
விஞ்ஞானிகளின் நேற்றைய அல்லது நாளைய கண்டுபிடிப்புக்கள் கடவுள் கொள்கைகளை
வெற்றி கொள்ள வந்தவைகள் எனக் கூறுவதற்கு முன்பு, கண்டுபிடிப்புக்களைச் செய்த விஞ்ஞானிகள்
என்ன கூறுகிறார்கள் என்று பார்த்தால் அவர்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் இயற்கை சொல்லிக்கொடுத்தவை
அல்லது பகவத் சங்கல்பம் என்கின்றனர்.
நமது அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று, சூன்யத்தில் இருந்து எதுவும் தோன்றாது
என்கிறபொழுது, இல்லாததைப் புதிதாகக் கண்டுபிடித்து விட முடியாது எனில், இன்றைய கண்டுபிடிப்புகள்
எங்கிருந்து வந்தன என்று ஆராயத் தொடங்குவோமானால் அதற்குப் பிராமாணம் சாஸ்திரத்தில்
இருக்கிறது , ஆனால் சாஸ்திரத்தில் எங்கிருக்கிருக்கிறது ?
அதற்கான பூர்வாங்க முயற்சியைத்தான் ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு தொடங்க இருக்கிறது, இது கத்திமேல்
ஸாகசம் செய்வது போல எனத் தெரிந்திருந்தும் , எம்பெருமானார் தலைக் கட்டிக் கொடுப்பார்
எனகிற தைரியத்தில் இருப்போமாக.
இது சம்பந்தமான
ஒரு மேடை உருவாக்கம் தொடர்பாக ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின் போஷகர்களில்
ஒருவரானஸ்ரீ.உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்
மற்றும் பிரபல சாஸ்திரவல்லுனர்களின் கருத்தை அறிந்த பொழுது அவர்கள்
கூறியது மேலும் பிரமிக்க வைத்ததோடு மட்டும் இன்றி , இந்தப் பாதையில் மேலும் பயனப்படப்
பெரும் உத்வேகத்தையும் கொடுத்தது.
விவாத
மேடைக் கமிட்டியின் திட்டம் மற்றும் செயல்
படும் முறை
நமது விவாத மேடைக் கமிட்டி இரண்டு பிரிவாக செயல் பட இருக்கிறது
1. பொது விவாத மேடை
2.
ஸனாதன தர்மமேடை
பொது விவாத மேடையின் பெயர் காரணம்
ஸ்ரீ இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு , மக்களுக்கு ஆன்மீகத்தில்
மற்றொரு கோணமான வேதவிஞ்ஞானம் பற்றிப் பல ஆன்டுகளாக நடந்து வரும் ஆராய்ச்சி குறித்து
அறிமுகம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. பொது விவாத மேடை என்பது பிரபல பேராசிரியர்கள்
மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்வார்கள். .விஞ்ஞான
ஆராய்ச்சியாளர்களில் ஆன்மீகத்துறையில் நாட்டம் உள்ள பலர் இன்று வேதவிஞ்ஞானம் பற்றிய
ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் இவர்களுடைய கருத்துக்களையும் இந்த மேடயில் பதிவு
செய்ய இருக்கிறார்கள்.இந்த மேடையில் பதிவு செய்யப்படுகின்ற கருத்துக்கள் விவாதங்களுக்கு
உட்பட்வை என்பதாலும், இதைக்குறித்த பல புதிய பதிவுகளை வரவேற்கிறது.
ஸனாதன
தர்மமேடையின் பெயர் காரணம்
இன்றைய பொது ஆன்மீக சமூகத்திற்கு - ஸனாதன மதம் என்று பெயர் - வாழ்வியலை
அடிப்படையாகக் கொண்டது - முக்திக்கான தேடலில் அல்ல - ஸனாதனம் மதம் என்பது - முதலும் முடிவும் இல்லாதது
- வேத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது ,ஸ்ரீவசிஷ்ட மகரிஷி,ஸ்ரீசக்தி மகரிஷி ஸ்ரீ
பராசரமகரிஷி ஸ்ரீவேதவியாஸர் ஸ்ரீ ஸுகப்பிரம்மம்
போன்றவர்களின் வாக்கை பிராமாணமாக ஒப்புக்கொண்டது -முக்திக்கான தேடலில் ஸனாதன மதத்தின்
உட்பிரிவுகளில் உள்ள கொள்கைகளை விவாதிப்பது
இந்த மேடைக்குப் பொருந்தாது.
இன்று பக்தி என்பது கோவிலுக்கு சென்று வழிபடுவது என்கிற அளவிலே நம்மால்
புரிந்துகொள்ளப்பட்டுள்ளது . ஆனால் நமது ஆச்சாரிய புருஷர்கள் வாழ்ந்த காலத்தில் நிலவிய
சூழ்நிலை தற்போது இல்லை. அவர்கள் வாழ்ந்த கால சூழ்நிலையில், பக்தி சாஸ்திரத்தில் கரைகண்ட
விற்ப்பன்னர்கள் எல்லா ஸம்பிராயத்திலும் இருந்தார்கள்
,
இன்று நமக்கு காணக்கிடைக்கிற
சாஸ்திர புத்தகங்கள் எல்லாம் அந்தந்த ஆச்சாரிய புருஷர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப
அந்தக் காலகட்டத்துக்கு வேண்டிய விஷயங்களுக்கு வேதசாஸ்திரத்தில் சொல்லப்பட்டவைகளில்
இருந்து விஷயங்களை ஸ்தாபித்தும் , நிரசித்தும் சித்தாந்தம் செய்திருந்தார்கள். ஆனால்
ஆச்சாரிய புருஷர்கள் வாழ்ந்த காலத்திற்கும்
நாம் வாழும் காலத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது .
ஆச்சாரிய புருஷர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களின் ஞானமும் தேவையும்,
நாம் வாழும் காலத்தில் வாழும் மக்களின் ஞானமும் தேவைக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.அன்று
வாழ்ந்த மக்ளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழியில் சாஸ்த்ர ஞானம் இருந்தபடியால் பரம்பொருள்
எது? என்கிற சித்தாந்தத்தில்
அவர்களுக்குள் விசாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கு ஆச்சாரிய புருஷர்களின அறிவுரை
பயன்பட்டது.
இன்று பரம்பொருள் எது என்கிற தர்க்கம் ஒரு சில சாஸ்திரம் அறிந்த விற்பண்னர்களின்
விவாத பொருளே அன்றி கீதையில் கண்ணன் சொன்ன பக்தி சாஸ்திரத்தின் ஆழம் அறியாத இன்றைய
அவசர உலகில் வாழும் அரைகுறை பாமரனுக்கு அறிய வேண்டியது ஒன்றும் இல்லை.
நமது ஆச்சாரியபுருஷர்கள் காலத்தில் வேதம் குறித்த விசாரம் நடந்து கொண்டிருந்தாலும்
விசாரம் செய்தவர்கள் சாஸ்திரம் தெரிந்ததோடு மட்டுமின்றி , வாதத்தில் எவரும் மறுக்கமுடியாத
சாஸ்திர பிரமாணங்களைக் காட்டும் பொழுது அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் நேர்மையையும்
அவர்களது வாழ்கையைப் பார்க்கும் நமக்குக் காணக்கிடைகின்றன . ஆகையால், இப்பொழுது அது
குறித்து இந்தமேடையில் விசாரிக்க ஒன்றும்மில்லை.
பொது விவாத மேடையில் அறிஞர்கள்
இரண்டு பிரிவாகத் தங்கள் கருத்தை விவரிப்பர், ஒரு பிரிவு பல பல்கலைகழகங்களைச் சேர்ந்த
புகழ் மிக்க பேராசிரியர்கள்,மற்றொரு பிரிவாகப் பிரபல சாஸ்திர அறிஞர்கள் கலந்து கொள்ள
இருக்கிறார்கள்.
இந்த மேடையில் விஞ்ஞானம் சொல்ல வந்தது என்ன எனபதைப் பேராசிரியர்களும்,
வேதத்தை விளக்கி, விஞ்ஞானத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமைக் கருத்தைப் பிரபல
சாஸ்திர அறிஞர்கள் நிரூபிக்க , அதைக் கொள்கை அளவில் இரு தரப்பும் ஓர் தீர்மானத்திற்கு
வந்தால் அடுத்த நிலைக்கு செல்வது என்றும் , மேலும் ஆழ்ந்து விவாதிக்க வேண்டிய விஷயங்கள்
, ஸனாதன மேடைக்கு செல்லும், பொது விவாத மேடை இரண்டாம் நிலை திட்டத்தை நோக்கி நகரும்,
எனத்திட்டமிடப்பட்டுள்ளன.
நோக்கம்
மற்றும் அவசியம்
ஸ்ரீ.இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின் பல கமிட்டிகளில்,
ஸனாதன மேடை என்பது மிக முக்கியமானதொரு விஷயமாக இருப்பதால், அது எதைக் குறித்து விவாதிக்கப்போகிறது,
மையக்கருத்து என்ன?, எப்படிச் செயல் படப்போகிறது?,என்ன தீர்வு கொடுக்க முயலுகிறது? எனபதைக் குறித்த ஓர் பொது அபிப்பிராயத்தை
அறிந்து கொளவதன் மூலம் இயக்கத்தின் நோக்கத்தைக் கூர் தீட்ட பயன்படும் என்கிற நோக்கத்தில்
இந்தப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்மீக நிகழ்வுகள் கோவிலைத் தாண்டி ஊடகங்களுக்கு வந்து பல ஆண்டுகள்
ஆனபோதும் அதில் ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி ஸ்வாமிகள்
தனது தனித்தன்மையாலும், ஸம்பிரதாயத்தில் நம்பிக்கையுடன் ஆன்மீக சமுதாயத்திற்கும் கேட்பார்
அற்றுக் கிடந்த ஸன்னிதிகளுக்கும் அவர் செய்ய முயற்சிக்கும் பணி யாராலும் மறுக்கமுடியாதது.
இது போன்ற சில காரணிகள் ,ஆஸ்திகர்கள் மத்தியில் அவர் மீது ஓர் ஈர்ப்பை
ஏற்படுத்தியதுடன் அவருடைய உபன்யாசங்களுக்குப் பெரும் திரளாகக் கூடத்தொடங்கினர் , அது
இந்த துறைக்கு வரமறுத்தவர்களை இத்துறைக்குள் செலுத்தி நலிந்து போயிருந்த உபன்யாசத்துறைக்குப்
புது ரத்தம் பாய்ச்சியதுடன் புனர் நிர்மாணத்திற்கு வழி வகுத்தது என்றால் அது மிகையன்று.
ஸ்ரீ.உ.வே.வேளுக்குடி
ஸ்வாமிகள் வெற்றி அவரது கேட்பவர் தினவடங்கச்
சொல்லும் தனித்தன்மையான உபன்யாசங்கள் ஒரு காரணம் என்றாலும் பொது மக்களிடத்தே ஏற்பட்டிருந்த ஆழமான தேடலை அது கட்டியங்கூறியது.
பொது மக்களிடத்தே ஏற்பட்டிருந்த ஆழமான தேடலுக்கான காரணம் , பக்தி விஷயத்தில் தங்களுடைய பிரச்சனைகளுக்கு ஒரு
வடிகாலைப் பற்றியதாக இருந்தது. எல்லாவற்றிலும் நவீனத்தை எதிர்பார்க்கும் சிலர் ஆன்மீகத்தையும்
நவீன முலாம் பூசிதாக எதிர்பார்த்தார்கள் அதைப் பணம் கொடுத்து பெறவும் துணிந்தார்கள்
, இதை வியாபாரமாக்கிக் கொழுத்த பலர் இன்று நீதிமன்ற நீண்ட படிகளில் அதற்கான விலையைக்
கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள், என்பது நமக்கு இங்கு முக்கியமல்ல. ஆனால், பொது மக்களிடத்தே
ஏற்பட்டிருக்கும் ஆழமான தேடலுக்கு உண்டான தீர்வு ஸனாதன தர்மத்தில் கொட்டிக்கிடக்கிற
பொழுது , அதை பொது மக்களிடத்தே கொண்டு சேர்க்கவேண்டிய சமூகக் கடமை ஆன்மீக இயக்கங்களுக்கு இரு க் கிறது.
இந்தக் கட்டத்தில்தான் நமது
ஆன்மீக பெரியவர்கள் ஆற்ற வேண்டிய சமூகக் கடமை வருகிறது, அவர்கள் அதற்கு என்றுமே தயார்.
ஆசையுடையோர்க்கெல்லாம் ............ என்று
ஸ்வாமி ராமாநுஜர் காட்டிய வழியைப்பின்பற்றி மேடையை ஏற்படுத்திக்கொடுக்க நாமும் தவறுவோமானால்
காலம் நம்மை ஒருபோதும் நம்மை மன்னிக்காது.
இயக்கங்கள் இதில் ஈடுபடுவதற்கு தயங்கியதற்கு இதில் உள்ள சவால்களும் தடைகளுமே காரணம், தடைகள்
குறித்து முன்பே கூறப்பட்டுள்ளது , அதாவது,
1. வெகுஜனங்களின் ஈடுபாடு குறைவு.
2.
ஸனாதன தர்ம இயக்கங்களுக்குப்
பொருளுதவி கிடைப்பதில் உள்ள சிக்கல்.
3. ஸனாதன மதத்தின் சாரமான விஷயங்களை வெகுஜனங்களின் முன்பு
வைக்க முடியாமை.
இதைக் களைவதற்கான முயற்சியே ஸ்ரீ.இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்
குழு ஒரு இயக்கமாக துவங்கப்பட்டதற்கான நோக்கம்.
வாய்ப்புக்கள்
மற்றும் சாதக சூழள்
ஸ்வாமி இராமாநுஜர் திருவவதாரமே அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பொது மக்களிடத்தே ஏற்பட்ட ஆழமான தேடலுக்கு த் தீர்வு கொடுப்தற்காகவே,
தேவைக்கும், தீர்வுக்கும் உள்ள முரண் வெளிப்படையானது. முரட்டு ஸம்ஸ்கிருத
வேதாந்தங்களைக் கற்ற வேதாந்திகள், சாமான்ய மக்களின் தேடலுக்கு அவர்களின் தகுதியின்மையைக்
காரணம்காட்டிய காலத்தில், ஆசையுடைமை என்கிற தகுதியைக் கொடுத்து தேவைக்கும், தீர்வுக்கும்
உள்ள முரண்பாடுகளை ஸ்வாமி இராமாநுஜர் களைந்தார்.
முரண்பாடுகள் இன்றும் உண்டு, ஆனால் கோணம் வேறு. அன்று ஸ்வாமி இராமாநுஜர்
சாஸ்திரத்திலும், ஆசரத்திலும் வைராக்கியமுடையவர்கள் மத்தியில் அவற்றை எளிமைப்படுத்தி
ஸ்வாமி தனது அவதாரா காரியத்தைச் செய்து முடித்து தனது நிர்வாகம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டி
நிற்கும்படியாகச் செய்தருளினார். ஆனால், இன்று ஸாஸ்திரத்திலும் ஆசாரத்திலும் பிடிப்புள்ளவர்களைத்
தங்கள் முன்னேற்றத்திற்குத் தடை கற்களாகவும், பொருளாதாரம் முன்னேற்றம் மட்டுமே பிரதானம்
என்று மாறிவிட்ட நிலையில், எந்தத் தர்மத்தையும் கடைபிக்கமுடியாத புதிய தலைமுறையினரிடம்
இன்று காணப்படுகிற தேடல் “ஓர் ஆச்சரியம்”
இந்த “ஆச்சரியத்தை” தொடர்ந்து நடந்தால்
ஸ்வாமி இராமாநுஜர் நாம் செய்ய வேண்டிய பணியின் கதவைத் திறந்து வைத்திருப்பது நம் கண்ணுக்கு
புலப்படத்துவங்குகிறது,
விஞ்ஞானம்
சொல்ல வந்தது மெய்ஞ்ஞானத்தையே
ஸ்ரீசக்தி மகரிஷி, ஸ்ரீ பராசரமகரிஷி ஸ்ரீவேதவியாஸர் தொடங்கி ஸ்ரீ ஸுகப்பிரம்மம்
வரை அறிதியிட்ட நமது ஸனாத தர்மமமானது வழக்கொழிந்து விட்டதா, இன்றைய நவீன உலகில்? அது பழம்பெருமை
பாடும் சடங்கு மட்டுமா? என்பதை மறுத்து
வேதமும்,சாஸ்திரங்களும் நேற்று இன்று மட்டுமல்லாது, இனி வரப்போகும் காலத்திற்கும் நின்று
நிலைத்து ஒளிர்ந்து வழி காட்டக்கூடியது. எப்படி எனில் வேதத்தையும், அது சொல்லவந்ததையும்
,அவ்வேதத்தின் அறுதிப்பொருளையும் உரத்துப் பேசுவதற்கு முன்பு இன்றைய நடைமுறையில் இதனை
மூன்று கட்டமாக முன்னெடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
“விஞ்ஞானம் சொல்ல வந்தது மெய்ஞ்ஞானத்தையே”
என்கிற கருத்தைப் புதிதாகச் சொல்ல முயற்சிக்க வில்லை, இது குறித்து பரனூர் மகாத்மா
என்றழைக்கப்படும் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்பிரேமி அண்ணா ஸ்வாமி அவர்கள்
தொடங்கிப் பல பிரபல சாஸ்திர அறிஞர்கள் அரை நூற்றாண்டாண்டிற்கும் மேலாகச் சொல்லி வருவதையே
வேறொரு பாணியில் கொடுக்க முயல்கிறோம்.
இந்த ஒற்றுமையைப்
பற்றிப் பல ஆண்டுகளாக உபன்யசித்து வருபவர்கள் நவீன விஷயங்களுக்கு நமது ஸம்பிரதாயம்
எவ்வகையிலும் சலைத்தவை அல்ல என விளக்குவதற்கும், ஆஸ்திகர்களின் பூட நாஸ்திக்யம் என்கிற
ஐயப்பாட்டை நீக்குவதற்கும் சொல்லிவந்தார்கள். பொது மேடைகளில் இவற்றை பேசவேண்டும் என்கிற
அவசியம் அவர்களுக்கு இல்லை. ஆனால், ஸ்ரீ.இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு இதனை ஒரு நோக்கமாக எடுத்துக்கொண்டு பயணிக்க இன்று
நிலவும் சூழளும் மக்களின் மன நிலை மாற்றமுமே
காரணம்.
இன்று நிலவும் சூழள்.
திராவிட இயக்கங்கள் வேர்விட ஆரம்பித்த காலம் தொடங்கி , தர்க்கம் போய்
குதர்க்கம் செய்யத்துவங்கியதும் , பொதுவாக அன்று நிலவிய சூழளும் அந்த இயக்கங்களுடைய
மேடைப் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடவே செய்தன, ஆனால் இன்று அந்த இயக்கங்களின் நிலை
நாம் அறிந்ததே , இந்திய மக்களின் ஆன்மாவில் ஆழப் பாய்ந்திருக்கும் வேர்களை அவர்களால்
அசைக்க இயலவில்லை.
மூடநம்பிக்கையைப் பற்றியும் பகுத்தறிவு பற்றியும் நமது ஆச்சாரியபுருஷர்களும் பேசியுள்ளார்கள்,
எது மூடநம்பிக்கை ? எதைப் பற்றிய பகுத்தறிவு
வேண்டும் ? என்பதைப் பற்றித்தான் நாமும் பேச விழைகிறோம்.
இன்று மக்கள் நம்பிக்கைக்குத் தேவை ஆதாரம். விஞ்ஞானம் அனைவருக்கும்
தெரிந்த மொழி என்பதால் அவற்றைக்கொண்டே நிரூபிக்க இயலும்.
மக்களின் மன
நிலை மாற்றம்
கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பிரம்மிக்கத்தக்கது. அதற்கு
ஆரம்பமாக இருப்பது கணினீ மற்றும் மென்பொருள் துறைகளால் இளைய தலைமுறையினர் இடத்தே ஏற்பட்டிருக்கும்
பொருளாதார மேம்பாடே இந்த வியக்கத்தகு மன நிலை மாற்றத்திற்குக் காரணம். எந்த ஒரு திடீர்
மாற்றமும் நல்லதையும், நல்லது அல்லாததையும் சேர்த்தே கொண்டு வரும், அது இயற்கையின்
நியதி.
நடுத்தர மக்களிடத்தில் இன்று காணப்படுகிற மனநிலை மாற்றம் பொருளாதார
மேம்பாட்டினாலே என்று உறுதியாகச் சொல்லமுடியும் . இந்தியத் தனி நபர் வருமானம், வறுமைக்கோடு
என்கிற அரசியல் சர்ச்சைகளுக்கு நாம் வரவில்லை என்றாலும், ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டால்
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களிடத்தே கடவுள் நம்பிக்கை என்றுமே குறைந்ததில்லை, ஆனால்
நடுத்தர வர்க்கம் எதிலேயும் காண்பிக்கும் நாசூக்கிற்குக் கடவுள் நம்பிக்கையும் விதிவிலக்கல்ல.
புதிதாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார
மேம்பாட்டினாலே, செய்யும் தொழிலில் வரும் நிலையில்லாத்தன்மை, மனஅழுத்தம், அதற்கு மருந்து,
மருத்துவர் ஆலோசனை எனத்தொடங்கி, இறுதியாகக்
கோவில் என்று முடிவதை எங்கும் பார்க்கின்றோம், நடுத்தர மக்களிடத்தில் இன்று காணப்படுகிற
இந்த மனநிலையில் யோகம், தியானம் என்று நம்பத்தகாத குருமார்களின் வெளிப்பகட்டிற்கு ஏமாந்து
கடைசியில்தான் இறைவன் சன்னதிக்கு வருகிறார்கள்.
இவ்வளவு விஷயங்களையும் கடந்து, அவர்களுக்காக இந்த மேடை தொடங்குவதற்குப்
பல காரணங்கள் இருக்கின்றன.
1. அவர்களின் தேடல் ,
2.
ஆழ்ந்த அறிவு
,
3.
தர்க்கத்தில்
நம்பிக்கை,
4.
அவர்களுக்கு
வேண்டிய ஆதாரம் .
போன்றவற்றால் அவர்கள் எதிர்ப்பார்க்கும்
அனைத்தையும், இந்த மேடையில் கொடுக்கமுடியும்.
செயல் திட்டம்
முதல் வருடம்
முதல் நிலை
1.
அறிமுகம்,
2.
தொடர்பு,
3.
ஆதாரம்.
இரண்டாம் வருடம்
இரண்டாம் நிலை
1.
வேதம் ஓர்அறிமுகம்.
2.
புரிந்துகொள்ளவேண்டியது.
3.
அது சொல்ல வந்த அறுதிப் பொருள்.
மூன்றாம் வருடம்
மூன்றாம் நிலை
1.
வாழ்கையில் பயன்படும் முறை.
2.
இருக்கவேண்டிய மனோநிலை.
3.
வாழ்வியலில் எப்படி ஆன்மீகத்தைப் பயன் படுத்த முயல்வது.
செயல்படுத்தும் முறை
முதல் நிலை
1.
அறிமுகம்,
2.
தொடர்பு,
3.
ஆதாரம்.
அறிமுகம்
வேதம் நம் பயன் பாட்டில் உள்ளது, ஆனால் அது நமக்கே தெரியாமல் , அதை
நிரூபிக்க அதற்கும் நமக்கும் உள்ள தொடர்பு , அதை நிரூபிக்க வேண்டிய ஆதாரம்.
மையக்கரு
தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் புரிந்து கொள்ள ஒரு ஊடகம் தேவை.
ஊடகம்
விஞ்ஞானம்
தலைப்பு
விஞ்ஞானம் சொல்ல வந்தது மெய்ஞ்ஞானத்தையே.
இவ்விரண்டையும் குறித்த ஓர் அறிஞரின் ஒப்புமை.
இது குறித்து ஆராய்சி செய்து கொண்டிருக்கும் ஆராய்சியாளர் திருமதி.ஸ்வதந்திரா அவர்கள், வாணியம்பாடியைச்
சேர்ந்த ஓர் மகப்பேறு மருத்துவர். ,அவர்கள் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சியின் விளைவாக
நமக்குக் கிடைத்த தகவலைக் கீழே கொடுத்துள்ளோம்
மெய்ஞானம்
|
விஞ்ஞானம்
|
1.
|
கர்ம வினைப்பயன்
|
1.
|
Genes and Genetic
coding
|
2.
|
பஞ்சாக்னி வித்யை
|
2.
|
Child’s Birth & death
|
3.
|
ஜீவாத்மா மேற்கொள்ளும்
4 மார்க்கங்கள், ஸம்ஸாரகதி, தூமாதிகதி, யமகதி, அர்ச்சிராதிகதி
|
3.
|
Near – death experience
|
4.
|
வைஸ்வாநரன், ஜாடராக்னி
|
4.
|
Digestive System and Basal metabolic rate
|
5.
|
கனவு காணும் ஜீவாத்மாவன்
நிலை
|
5.
|
Dreams
|
6.
|
ஜீவாத்மா அனுபவிக்கும்
மூன்று நிலைகள் - விழிப்பு , கனவு , ஆழ்ந்த உறக்கம்
|
6.
|
Wakefulness , dream state and deep sleep
|
7.
|
ஞான கர்மேந்திரியங்கள்
|
7.
|
Special senses and nerve plexuses
|
8.
|
ஜீவாத்மாவின்
அளவும் குணங்களும்
|
8.
|
Micro chips and Nano particles
|
9.
|
எம்பெருமான் விளைவிக்கும்
மாயை என்னும் திரை
|
9.
|
Membrane Theory
|
10.
|
மஹாவிஷ்ணு என்கிற
தத்துவம்
|
10.
|
Sting Theory
|
11.
|
அவனின் எல்லை
காணமுடியாத ஆனந்தம் – ஆனந்தவல்லி
|
11.
|
One cannot reach the edge of Universe
|
12.
|
ஸ்ரீமந் நாராயணன்
|
12.
|
Matter (பருப்பொருள்
)
|
13.
|
ஏகோ ஹவை நாரயண
ஆஸீத் - (மஹோபனிஷத்-1), முதல் தனி வித்து
|
13.
|
Singularity (தனித்துவம் )
|
14.
|
எம்பெருமானின்
வேகம்
|
14.
|
Expansion of the singularity (Inflation theory of the
formation of the Universe ) பிரபஞ்சத்தின் தோற்றம்
|
15.
|
எம்பெருமான் ப்ரபஞ்சத்தை
உண்டு உமிழ்ந்தது
|
15.
|
Shrinking and expansion of the universe
பிரபஞ்சம் சுருங்கி விரிவது
|
16.
|
அணடாநாம் து சஹஸ்ராணாம்............ (.விஷ்ணுபுராணம்
- 2-7-27)
|
16.
|
Parallel Universes
கணக்கற்ற பிரபஞ்சங்கள்
|
17.
|
எம்பெருமானின்
வ்யூக நிலை - பரவாசுதேவன், அநிருத்தன், சங்கர்ஷணன், பிரத்யும்னன்
|
17.
|
Forces that maintain the universe , gravity, electro
magnetism, strong and weak nuclear forces
|
18.
|
பகவானின் அகடிதகடனா
சாமர்த்தியம்
|
18.
|
Factors that give shape to the universe
|
19.
|
எம்பெருமானின்
கரிய நிறம்
|
19.
|
Dark energy and Dark matter
|
20.
|
எம்பெருமானின்
எல்லையற்ற
ஐஸ்வர்யம் - சூழ்ந்து
அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும்பாழேயோ
|
20.
|
Meta- Universe
|
|
|
|
|
|
இந்தப் பட்டியல் ஸனாதன தர்மமேடை எதை நோக்கி பயணிக்க இருக்கிறது என்பதற்கான
ஒரு மாதிரி மட்டுமே . இது குறித்த விவாதம் தொடங்கும் முன்பு விவாதப்பொருளை இரு தரப்பு
அறிஞர்களும் முடிவு செய்வார்கள்.
அவர்கள் செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி மகத்தானது. இது மெய்ஞ்ஞானத்தைப்பற்றிய
வேறொரு கோணமாக இருப்பதால் நிச்சயம் மாற்றுக் கருத்து இருக்கும் ,இருந்தால் அதை ஸ்ரீ.
இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு வரவேற்கிறது, அதற்கெனவே ஏறப்பட்ட நமது ஸனாதன
தர்ம மேடை.அதைச் செய்ய முயற்சிப்பதுதான் ஸ்ரீ.இராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவின்
நோக்கம்.
விவாத மேடைக்கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட திருச்சித்ரகூடம் ஸ்ரீ.உ.வே.ரங்காசாரியார்
ஸ்வாமி அவர்களும் ,வேதவிஞ்ஞானத்தைப் பற்றி பேசுவதற்கு நமது பாரத தேசத்திலிருந்தும்
, வெளிநாடுகளிள் இருந்தும் தலைசிறந்த பல்கலைகழக
பேராசியர்களை தந்து உதவுவாதாக க் கூறியுள்ள ஸ்ரீ.உ.வே.சதுர்வேதி ஸ்வாமி அவர்களும். இசைந்துள்ளது நமக்கு மன நிறைவாக
இருப்பதுடன், இதனை எம்பெருமானார் தலைக்கட்டிக் கொடுப்பார் என்கிற தைரியத்தில் இருப்போமாக.
அலர்மேல் மங்கை
சமேத திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
எம்பெருமானார்
திருவடிகளே சரணம்.
ஜீயர் ஸ்வாமிகள்
திருவடிகளே சரணம்.
கிருபா.அரிகிரருஷ்ணனன்
பொதுச்செயலாளர்
ஸ்ரீஇராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு
27,வெள்ளாழ வீதி
புதுவை.605001
Cell-9843010306